• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலவிதிப்பு கட்டளைச் சட்டத்திற்கான திருத்த
- காலவிதிப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.