• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தெங்கு கைத்தொழில் அபிவிருத்திக்காக வழிப்படுத்தல் குழுவொன்றைத் தாபித்தல்
- தெங்குத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் வெற்றிகரமாக தெங்குச் செய்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட வழிப்படுத்தல் குழுவொன்றை தாபிக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.