• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்துராஜவெலவில் அமைந்துள்ள ஏக்கர் 02 றூட் 03 பேர்ச்சர்ஸ் 34.51 விஸ்தீரணம் கொண்ட காணியை Ceylon Petroleum Storage Terminals Ltd நிறுவனத்திற்கு உடைமை மாற்றுத
- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் தற்போது முத்துராஜவெல மணல் மீட்பு பிரதேசத்தில் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் காணியில் எண்ணெய் தாங்கி கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்த மனையிடத்திற்கு நாளாந்தம் வருகைதரும் எண்ணெய் தாங்கி வாகனங்களை நிறுத்திவைப்பதற்காகவும் ஏனைய அபிவிருத்தி பணிகளுக்காகவும் ஏக்கர் 02 றூட் 03 பேர்ச்சர்ஸ் 34.51 விஸ்தீரணம் கொண்ட காணியை Ceylon Petroleum Storage Terminals Ltd நிறுவனத்திற்கு விற்பனை மூலம் உடைமை மாற்றுவதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.