• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Water Closets, Water Draw off Taps மற்றும் உலோக, PVC வகை கட்டுப்பாட்டு வால்வுகள் என்பவற்றுக்கான ஒழுங்குறுத்துகை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்
- நீர் பாவனையாளர்கள் தரமற்ற துணைக்கருவிகளை பயன்படுத்துவதனால் நீர் பாரியளவில் கசிவடைந்து விரயமாகின்றதெனவும் தரமற்ற நீர் துணைக்கருவிகள் உள்நாட்டு சந்தைக்கு வருவதை தடுப்பதற்கு ஒழுங்குறுத்தப்படவேண்டிய நீர் கருவி வகைகள் பல உள்ளதெனவும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க நுகர்வோருக்கும் உள்நாட்டு நீர் துணைக்கருவி உற்பத்தியாளர்களுக்கும் அதேபோன்று சுற்றாடல் ரீதியில் நன்மைபயக்கக்கூடியவிதத்திலும் பிரதான அரசாங்க நிறுவனங்களுடன் கலந்துரையாடி பொது மக்களினதும் அக்கறைதாரர்களினதும் கருத்துக்களின் அடிப்படையில் Water Closets, Water Draw off Taps மற்றும் உலோக, PVC வகை கட்டுப்பாட்டு வால்வுகள் என்பவற்றுக்காக இனங்காணப்பட்டுள்ள ஒழுங்குறுத்துகை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.