• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ள கடன் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் வசதிகளை விரிவுபடுத்துத
- 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித்திட்டமானது அரசாங்கத்தின் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டமொன்றாக அரசாங்கத்தின் ஏனைய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுடன் ஒன்றிணைந்து முழு நாட்டையும் தழுவும் விதத்தில் விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதோடு, 2019 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியன்றுக்கு 70,000 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கடன் தொகையானது 40,240 பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்திலுள்ள மொத்த நிதி மற்றும் நிதிசாரா பிரேரிப்புகள் 22 இலிருந்து 'எனது எதிர்காலம்' கடன் திட்டம் கல்வி பொது தராதர உயர் கல்வி மாணவர்களுக்கு அப்பால் விரிவுபடுத்தியும் 'மாத்ய அருன' கடன் திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் காலத்தை 2019‑07‑02 ஆம் திகதியிலிருந்து 2020‑12‑31 ஆம் திகதிவரை நீடித்தும், 'ரன் அஸ்வென்ன', 'கொவி நவோதா', 'ஜய இசுர', 'திரி சவிய', 'ஹரித்த நய' மற்றும் 'விசேட தொழிற்படு மூலதனம்' போன்ற கடன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பிணைத்திட்டத்திற்கு தேசிய சேமிப்பு வங்கியையும் உள்ளடக்கி இந்த கடன் திட்டத்தை திருத்தி இந்த கடன்களை வழங்குவதன் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை வெற்றிக் கொள்வதற்கும் கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முகங்கொடுக்க நேரிடும் தொழினுட்ப மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளை குறைப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.