• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரகஹகந்த - களுகங்கை, மகாவலி "F" வலயத்தை நச்சுத்தன்மையற்ற சேதன விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலைபேறுடைய அபிவிருத்தி வலயமொன்றாகப் பிரகடனப்படுத்தல்
- மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை லக்கல பல்லேகம பிரதேசத்தில் குடியமர்த்தி மகாவலி "F" வலயம் என்னும் புதிய வலயமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இது நீலப்பசுமை எண்ணக்கருவின் கீழ் உருவாக்கப்பட்ட கிராமமொன்றாக உள்ளது. இந்த பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் மனித நடமாட்டம் எதுவுமற்ற நக்கல்ஸ் மலைத்தொடரிலிருந்து பாய்ந்து வரும் நீரை களுகங்கை நீர்த்தேக்கத்தின் ஊடாக வழங்கப்படுவதோடு, இந்த வலயம் நச்சுத்தன்மையற்ற சேதன பசளை பாவனை மற்றும் சுத்தமான நீர் பாவனை என்பவற்றின் ஊடாக கமத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான பிரதேசமொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால் மொரகஹகந்த - களுகங்கை வலது மற்றும் இடது கரை குடியேற்ற வலயம் அல்லது மகாவலி "F" வலயம் நச்சுத்தன்மையற்ற சேதன விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலைபேறுடைய அபிவிருத்தி வலயமொன்றாகவும் களுகங்கை மற்றும் அம்பன் கங்கை உயர் நீர்த்தேக்க பிரதேசம் நச்சுத்தன்மையற்ற நீர் மற்றும் சேதன பசளை பயன்படுத்தி விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசமொன்றாகவும் பிரகடனப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.