• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயன ஆயுதங்கள் தொடர்பான சமவாயம் மற்றும் இரசாயன பாதுகாப்பு, பாதுகாப்பு முகாமைத்துவம் பற்றிய ஆசிய பிராந்தியத்தில் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் ஆசிய உறுப்பு நாடுகளினது பிராந்திய மாநாடு
- முக்கியமாக ஆயுதமற்ற உடன்படிக்கையொன்றான இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்தல், விருத்தி செய்தல், ஒன்று திரட்டுதல் மற்றும் பயன்படுத்தலைத் தடை செய்தல் மற்றும் அவற்றை அழித்தொழித்தல் என்பவற்றுக்கான சர்வதேச சமவாயம் மறைமுகமாக இரசாயன அனர்த்தம் மற்றும் இரசாயன பொருட்கள் சார்ந்த பயங்கரவாத செயற்பாடுகளை குறைப்பதற்கு நேரடி பங்களிப்பினை வழங்குகின்றது. 1993 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் இலங்கை இணைந்துள்ளது. இதற்கமைவாக, ஆசிய உறுப்பு நாடுகளின் 15 பிரதிநிதிகளினதும் உள்நாட்டு பிரதிநிகள் 25 பேர்களினதும் பங்களிப்புடன் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான சமவாயம் மற்றும் இரசாயன பாதுகாப்பு, பாதுகாப்பு முகாமைத்துவம் பற்றிய ஆசிய உறுப்பு நாடுகளினது பிராந்திய மாநாடு பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் இரசாயன ஆயுத சமவாயத்தை நடைமுறைப்படுத்தும் தேசிய அதிகாரசபையினால் இரசாயன ஆயுதங்களை தடை செய்யும் சர்வதேச அமைப்புடன் இணைந்து 2019 திசெம்பர் மாதம் 03, 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.