• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஆசிரியர் சேவையையும் இலங்கை அதிபர் சேவையையும் திணைக்களம் சார்ந்த சேவையாக மாற்றுதலும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றினை தாபித்தலும்
- ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகள் சார்பில் நியாயமான சம்பள அளவுத்திட்டமொன்றை வழங்கும் முதல் கட்டமாக ஆசிரியர் சேவையை திணைக்களம் சார்ந்த சேவையொன்றாக மாற்றுவதற்கும் இந்த சேவைக்கு பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கும் தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு அமைச்சரவை யினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளை திணைக்களம் சார்ந்த சேவைகளாக மாற்றுவதற்கும் இதற்குப் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க காலம் எடுக்கும் என்பதனால் இடைக்கால பிரேரிப்பொன்றாக அரசாங்கத் துறை சம்பளங்களை மீளாய்வு செய்வது சம்பந்தமான விசேட ஆணைக்குழுவுக்கு தொடர்புபடுத்தப்பட்டுள்ள 'ஆசிரியர் மற்றும் அதிபர் களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது சம்பந்தமாக கல்வி அமைச்சின் அவதானிப்புரைகளும் பிரேரிப்புகளும்' உள்ளடக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள இடைக்கால சம்பள பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.