• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத் துறையில் நிலவும் தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் தொடர்பிலான தகவல்களை "Smart Sri Lanka” நிறுவனத்தின் ஊடாக விளம்பரப்படுத்துவதன் மூலம் இளைஞர்களின் தொழில்வாய்ப்பின்மையைக் குறைத்தல்
- தொழில்சார் வழிகாட்டல் பணிகளை தேசிய ரீதியில் ஒருங்கிணைப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் தொடர்புடைய உத்தியோகத்தர்களை கிராமமாக பயிற்றுவிப்பதற்கும் நவீன தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி தொழில்சார் பாடநெறிகள், தொழில்கள் மற்றும் தொழில்முயற்சிகள் பற்றிய தகவல்களைக் கொண்ட மென்பொருள்களை வடிவமைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் என்பன "Smart Sri Lanka” நிறுவனத்தின் பிரதான பணிகளாகும். இதற்கிணங்க அரசாங்க வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் தொழில்வாய்ப்புகள் அடங்கலாக அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் சகலவற்றிலும் நிலவும் தொழில்வாய்ப்புகள், ஆட்சேர்ப்பிற்கான அறிவித்தல்கள் அரசாங்கத்தின் சகல அமைச்சுக்களும் அதன் கீழுள்ள நிறுவனங்களும், அரசாங்க வங்கிகளினாலும் நிதி நிறுவனங்களினாலும் வர்த்தகர்களுக்கு, வர்த்தக நிறுவனங்களுக்கு மற்றும் சுய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசேட கடன் திட்டங்களும் தொழிநுட்ப உதவிச் சேவைகளும், உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு தொழில்முயற்சிகள் பற்றிய தகவல்கள், அரசாங்கத்தின் அமைச்சுக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் போன்ற தகவல்ளை "Smart Sri Lanka” மென்பொருளின் ஊடாக வௌியிடுவதற்கும் அரசாங்க பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் தொழிநுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில், தொழில்சார் பயிற்சி நிறுவனங்களிலிருந்து வௌியேறும் பயிற்சியாளர்களையும் இந்த மென்பொருளில் பதிவு செய்வதற்கு உரிய நிறுவனங்களில் தொழில் ரீதியிலான வழிகாட்டல் பிரிவுடன் இணைந்து செயலாற்றுவதற்கு "Smart Sri Lanka” நிறுவனத்திற்கு அதிகாரத்தினை கையளிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.