• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒஸ்ரிய சலுகை கடன் திட்டத்தின் மூலம் கண்டி போதனா வைத்தியசாலை மனையிடத்தில் நிலையற்ற சரிவினை முறையாக செப்பனிடும் கருத்திட்டத்தை வழங்குதல்
- கண்டி போதனா வைத்தியசாலை மனையிடத்தில் நிலையற்ற சரிவினை முறையாக செப்பனிடும் கருத்திட்டத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஒஸ்ரிய சலுகை கடன் திட்டத்தின் ஊடாக M/s Porr GmbH நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.