• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத சேவையை திணைக்களம் சார்ந்த சேவையாக மாற்றுதலும் இந்த திணைக்களத்திற்கு விசேடமானதும் அதற்கே உரித்தானதுமான சம்பள கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துதலும்
- இலங்கை புகையிரத சேவையை திணைக்களம் சார்ந்த சேவையாக மாற்றுவதற்கும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கும் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பதில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் இது சம்பந்தமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் போது எழக்கூடிய நடைமுறைப் பிரச்சினைகள் உட்பட அவை குறைவாக இருக்கும் விதத்தில் இந்த பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் சிரேட்ட உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.