• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலை யொன்றாக தரமுயர்த்துதல்
- கண்டி போதனா வைத்திய சாலையை தேசிய மட்ட வைத்தியசாலையொன்றாக தரமுயர்த்துவதன் மூலம் நோயாளிகளுக்கு கிடைக்கும் நலன்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த வைத்தியசாலையை 'தேசிய வைத்தியசாலை - கண்டி' என மீளப் பெயரிடுவதற்கும் இதன் தலைவராக பிரதி பணிப்பாளர் அதிபதி தரத்தைச் சேர்ந்த மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கும் பொருட்டும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.