• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுங்க கட்டளைச்சட்டத்தின் (235 ஆம் அத்தியாயம்) 69 ஆம் பிரிவின் கீழ் தனியார் சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்களை விதித்துரைப்ப தற்கான கொள்கை கட்டமைப்பு
- 2016 ஆம் ஆண்டிலிருந்து பொதுவான சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்களுக்கான கொள்கை கட்டமைப்பு நடைமுறையிலுள்ளது. அத்துடன், 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புக்கு அமைவாக புதிதாக தாபிக்கப்படும் பொது அல்லது தனியார் சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதமொன்று சார்பில் ஆகக்குறைந்தது 50,000 சதுர அடி இருக்கவேண்டுமென்பதோடு, தற்போதுள்ள பொருட்குதங்களும் இந்த தேவைக்கு அமைவாக மாற்றப்படுதல் வேண்டும். ஆயினும், தொழில்முயற்சியின் தன்மைக்கேற்ப சதுர அடியானது தீர்மானிக்கப்படவேண்டுமென குறிப்பிட்டு சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குத உரிமையாளர்களும் தனியார் பொருட்குதங்களை நிறுவுவதற்கு எதிர்பார்க்கும் வர்த்தகர்களும் அவர்களுடைய விருப்பமின்மையை தெரிவித்துள்ளார்கள். இதற்கிணங்க, உரிய சதுர அடி அளவு பற்றிய வரையறையினை பொது சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்களுக்கு மாத்திரம் தொடர்ந்தும் செல்லுப்படியாகும் விதத்திலும் தனியார் சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதமொன்றில் இருக்க வேண்டிய சதுர அடியானது சுங்க பணிப்பாளர் அதிபதியினால் தொழில்முயற்சியின் தன்மைக்கு அமைவாக தீர்மானிக்க இயலுமாகும் விதத்திலும் உள்ளூராட்சி நிறுவனங்களின் தேவைகளுக்கு அமைவாக பொருட்குதங்கள் நிர்மாணிக்கப்படக்கூடிய விதத்திலும் சுங்க கட்டளைச்சட்டத்தின் (235 ஆம் அத்தியாயம்) 69 ஆம் பிரிவின் கீழ் தனியார் சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்களை விதித்துரைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கொள்கை கட்டமைப்பை அமுல்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.