• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை - 2017
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(3) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுடன் வாசிக்கப்படவேண்டிய 1978 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சனாதிபதி நிதிய சட்டத்தின் 9(2) ஆம் பிரிவிற்கு அமைவாக 2017 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்குரியதான சனாதிபதி நிதியம் கணக்காய்வாளர் அதிபதியினால் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க இது தொடர்பிலான கணக்காய்வு அறிக்கையை இந்த நிதியச் சட்டத்தின் 10 ஆம் பிரிவிற்கு அமைவாக பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.