• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தையும் 2011 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) சட்டத்தையும் திருத்துதல்
- 2008 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7 ஆம் பிரிவின் பிரகாரம் முத்திரைத் தீர்வை சம்பந்தமாக நியமனஞ் செய்யப்பட்ட தத்துவம் பெற்றவர் களினால் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் அதிபதிக்கு அனுப்பப்படும் முத்திரைத் தீர்வைகளாவன செலுத்தப்பட வேண்டிய அளவினை விட கூடுதலாகவோ அல்லது பிழையாகவோ செலுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த தொகையை மீள செலுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படும் சந்தர்ப்பங்கள் காணக்கிடைக்கின்ற போதிலும் இவ்வாறு செய்யப்படும் உரிமைக் கோரிக்கைகள் உண்மையானவையெனவும் சட்டபூர்வமானதெனவும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் அதிபதி திருப்தியடைந்தாலும் 2011 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) சட்டத்தில் அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லாமையினால் மீள செலுத்த முடியாதுள்ளது. ஆதலால், இதற்கான வாய்ப்பினை ஏற்பாடு செய்யும் விதத்தில் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தையும் 2011 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) சட்டத்தையும் திருத்தும் பொருட்டு சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.