• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நிய செலாவணி சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவி
- அனுமதி வழங்கப்பட்டுள்ள முதலீடுகளுக்குரியதாக அந்நிய செலாவணி மூலதன கொடுக்கல் வாங்கல்கள் வகை அதன் எல்லைகள் மற்றும் உரிய பிற நிபந்தனைகள் சம்பந்தமான அதிகாரத்தினை கையளிப்பதற்காக அமைச்சரவை யின் அங்கீகாரத்துடன் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நிய செலாவணி சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ் 2017 நவெம்பர் மாதம் 17 ஆம் திகதியிடப்பட்ட 01 ஆம் இலக்க கட்டளையானது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளைக்கு அமைவாக ஏற்றுமதியாளர்கள் அவர்களுடைய ஏற்றுமதி வருமானத்தை ஏற்றுமதி செய்யப்பட்ட திகதியிலிருந்து 120 நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டுவர வேண்டியிருந்தாலும் வௌிநாட்டு கொள்வனவாளர்களை கவர்ந் திழுப்பதற்கு இயலுமாகும் வகையில் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையின் பேரில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 120 நாட்கள் என்னும் கால கட்டமைப்பை 180 நாட்கள் வரை நீடிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள உடன்பாட்டினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அதற்கிணங்க, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நிய செலாவணி சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழான 2017 நவெம்பர் மாதம் 17 ஆம் திகதியிடப்பட்ட 01 ஆம் இலக்க கட்டளையை திருத்துவதற்கும் இந்த சட்டத்தின் 29 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த திருத்தங்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.