• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்திற்குரியதான திருத்தப்பட்ட கொள்கை வரைவு
- மிக்கப் பொறுப்புடன் அரசாங்க நிதி முகாமிக்கப்படுகின்றதென்பதை உறுதிப்படுத்து வதற்கான வழிமுறையொன்றாக பின்பற்றப்படவேண்டிய அரசாங்க நிதி குறியிலக்குகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டமானது அங்கீகரிக்கப்பட்டது. குறித்த இந்த சட்டத்தில் திட்டவட்டமாக விதித்துரைக்கப்பட்டவாறு மொத்த அரசாங்க கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நூற்றுவீதமாக 2006 ஆம் ஆண்டில் 85சதவீத மட்டமாகவும் 2013 ஆம் ஆண்டில் 60 சதவீத மட்டமாகவும் குறைத்துக் கொள்வதற்கும் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நூற்றுவீதமாக 2013 ஆம் ஆண்டில் 5 சதவீத மட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், இலங்கை பொருளாதாரம் முகங்கொடுத்த பல்வேறுபட்ட உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் நிலவிய சாதகமற்ற நிலைமைகள் காரணமாக இந்த குறியிலக்கை எய்த முடியாமற் போனமையினால் குறித்த இந்த பொருளாதார இலக்குகள் 2013 ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டன. தற்போதைய அரசாங்க நிதி நிலைமைகளின் மீது வரவுசெலவுத்திட்ட பற்றாகுறையையும் மொத்த அரசாங்க கடன் அளவையும் பொருளாதாரத்திற்கு ஏற்ற மட்டத்தில் பேணவேண்டியுள்ள மையினால் அதன் பொருட்டு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய அரசாங்க நிதிக் குறியிலக்குகளைப் பிரகடனப்படுத்தி நிதிச் சட்டத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை திருத்துவதற்கு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.