• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கெலிஓயா நகர வசுத்தரிப்பு நிலையம் மற்றும் பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றை நிர்மாணித்தல்
- நுவரெலியா - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கெலிஓயா பிரதான வசுத்தரிப்பு நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாமை, பொது மக்களுக்கு, பேருந்து சாரதிகளுக்கு மற்றும் நடத்துநர்களுக்கு தேவையான வசதிகள் இல்லாமை அண்மையிலுள்ள பாதைகள் இருமருங்கிலும் நடைபாதை வியாபாரிகளினால் நகரத்தில் நெரிசல் தீவிரமடைந்துள்ளமை போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நகரத்தின் எதிர்கால நகர அபிவிருத்தி பணிகளுக்கு வசதிகளை செய்யும் விதத்தில் தேவையான வசதிகளுடன்கூடிய வசுத்தரிப்பு நிலையம் உட்பட பொருளாதார மத்திய நிலையம் சார்பில் 3 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை 233.23 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் நிர்மாணிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.