• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மகாவலி அதிகாரசபை சட்டத்தின் 13(18) ஆம் பிரிவுக்கு அமைவாக துணைக் கம்பனியொன்றாக தாபிக்கப்பட்டுள்ள மகாவலி மதியுரை சேவை பணியக (தனியார்) கம்பனியை கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சுக்கு கையளித்தல்
- இலங்கை மகாவலி அதிகாரசபையானது 1998 ஆம் ஆண்டில் மீளமைக்கப்பட்டதன் பின்னர் கம்பனிகள் பதிவாளர் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ள மகாவலி மதியுரை சேவை பணியக (தனியார்) கம்பனியானது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கருத்திட்டங்களுக்கும் நீர்பாசனத் துறைக்கும் மதியுரைச் சேவைகளை வழங்கும் கருத்திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் நோக்கங்களுடன் செயற்படுகின்றது. சட்டமா அதிபரின் கருத்துக்கு அமைவாக கலைத்துமூடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த கம்பனி கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு மதியுரைச் சேவைகளை வழங்குவதற்கும் அதேபோன்று கிராமிய கைத்தொழில் பிரிவுகளுக்குரிய சிறிய அளவிலான பொறியியல் நிர்மாணிப்பு பணிகளின் பொருட்டும் பயனுள்ள வகையில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் அதன் நிதி, பௌதிக சொத்துக்கள், பொறுப்புக்கள், பதவியணி, ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மதியுரைச்சேவை ஒப்பந்தங்கள், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் யாவற்றுடனும் இந்த அமைச்சுக்கு உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக கையளிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினாலும் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.