• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணத்திற்கான கங்கை கருத்திட்டம்
- யாழ்குடா நாட்டினுள் கங்கைகள் இல்லாமையினால், அதன் நீர் பற்றாகுறையை தவிர்ப்பதற்கும் வடமராட்சி களப்பு எல்லையில் அமைந்துள்ள கிணறுகளில் நீரின் உவர் தன்மையை குறைப்பதற்கும் இந்த பிரதேசத்தில் கமத்தொழில் நடவடிக்கை களுக்கான நீர் விநியோகத்தை ஆண்டொன்றில் நன்நீர் 8 மில்லியன் கனமீற்றர்களால் அதிகரிப்பதற்கும் நன்நீர் வசதியினை வழங்குவதன் மூலம் குடிநீர் மற்றும் வீட்டுத்தேவைகளுக்கான நீர் விநியோகத்தை அதிகரிப்பதற்குமான நோக்கத்துடன் இரண்டு கட்டங்களாக 5 வருட கால கருத்திட்டமொன்றாக 'யாழ்ப்பாணத்திற்கான கங்கை கருத்திட்டம்' திட்டமிடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத 12,610 ஹெக்டயர் மற்றும் நெல், விவசாய பயிர்கள், பெருந்தோட்ட பயிர்கள் மற்றும் புற்தரைகளுடன் கூடிய 1,315 ஹெக்டயர் அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதோடு 300,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு நலன்களும் கிடைக்கப்பெறும். இதற்கிணங்க இந்தக் கருத்திட்டத்தை 3,609/- மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.