• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய புத்தாக்க முகவராண்மையைத் தாபித்தல் சட்டத்தை அங்கீகரித்த
- புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சி தொடர்புபட்ட பல்வேறு தரப்பினர்களை ஒருங்கிணைப்பதற்கும் ஆராய்ச்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் புதிய ஆக்கங்களை வர்த்தக மயப்படுத்துவதை இலகுபடுத்தி அதன் மூலம் உற்பத்தி துறைக்கு நன்மைகளை வழங்குவதற்கும் பணிகள் இரட்டிப்பாவதையும் பகுதியளவில் ஒத்திருப்பதனையும் தடுத்து கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய பணிகளை மேற்கொள்வதற்கும், பரந்துபட்ட தரப்பினர்களினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மீளாய்வு செய்தல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல், இநத துறைக்குரிய விடயங்கள் சம்பந்தமான நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளை ஒப்பிடும் போது நிதி அமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற பிரதான நோக்கங்களுடன் 'தேசிய புத்தாக்க முகவராண்மையை' தாபிப்பதற்காக சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை மும்மொழிகளிலும் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்ப தற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.