• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதிச் சட்டமூலம் - 2019 இற்கான குழுநிலை திருத்தங்கள்
- 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் மோட்டார் வாகனங்களின் மீது காபன் வரி விதிக்கப்பட்டுள்ளது. வாகனமொன்றின் முதலாவது பதிவிலிருந்து கடந்துள்ள காலம், எஞ்சின் ஆற்றல் மற்றும் எரிபொருள் வகை என்பவற்றிக்கு அமைவாக உரிய வரி தீர்மானிக்கப்படுகின்ற போதிலும் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைகள், துறைசார் நிபுணர்களின் அவதானிப்புரைகள் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் இதனை அமுல்படுத்ததுவதில் நிலவும் பிரச்சினைகள் என்பவற்றை கவனத்திற்கு கொண்டு இந்த அடிப்படையினை மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க நிதி அமைச்சரினால் திட்டவட்டமாக குறிப்பிடப்படும் விதத்திலும் எரிபொருள் பாவனை விகிதம் என்பவற்றின் மீது காபன் வரியினை அறவிடுவதற்கு இயலுமாகும் வகையில் சட்டவரைவை தேவையான திருத்தங்களை நிதித் சட்டத்திற்கான குழுநிலை சந்தர்ப்பத்தில் உள்ளடக்குவதற்குத் இயலுமாகும் வகையில் வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.