• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019‑10‑15 ஆம் திகதியிலிருந்து 2020‑07‑14 ஆம் திகதிவரையான ஒன்பது (09) மாத காலத்திற்கு பெற்றோல் (92 Unl) மற்றும் பெற்றோல் (95 Unl) ஆகிய இணைந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்த மொன்றை செய்து கொள்ளல்
- பெற்றோல் (92 Unl) 1,924,000 பெரல்கள் சிங்கப்பூரில் சாதாரண பெற்றோல் விலையுடன் பெரலொன்றுக்கு Premium பெறுமதி 3.456 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும் பெற்றோல் (95 Unl) 476,000 பெரல்கள் சிங்கப்பூரில் சாதாரண பெற்றோல் விலையுடன் பெரலொன்றுக்கு Premium பெறுமதி 3.876 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும் 2019‑10‑15 ஆம் திகதியிலிருந்து 2020‑07‑14 ஆம் திகதிவரையான ஒன்பது (09) மாத காலத்திற்கு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் சிங்கப்பூர் M/s. Vitol Asia Pte. Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.