• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியீட்டம் செய்யப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - வட மாகாணத்தில் 11 சிவில்வேலை ஒப்பந்த பொதிகளுக்கான ஒப்பந்தங்களை கையளிப்பதற்கான அங்கீகாரம்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியீட்டம் செய்யப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வட மாகாண வீதிகளை புனரமைத்தல் / மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் என்பவற்றுக்கான 11 ஒப்பந்த பொதிகளிலிருந்து 08 பொதிகளை Maga Engineering (Pvt) Ltd. நிறுவனத்திற்கும் 02 பொதிகளை China National Technical Import and Export Corporation (China) மற்றும் R.R. Construction Engineering Corporation Ltd. ஆகிய கூட்டு தொழில்முயற்சிகளுக்கும் பொதி யொன்றை China State Construction Engineering Corporation Ltd. China நிறுவனத்திற்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப் பட்டுள்ளவாறு வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.