• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி உபநகர புகையிரதப் பாதை கருத்திட்டத்தின் சாத்தியத்தகவாய்வு மற்றும் விரிவான வடிவமைப்பு ஆலோசனை சேவை
- கண்டி உபநகர புகையிரதப் பாதை கருத்திட்டத்தின் சாத்தியத்தகவாய்வு மற்றும் விரிவான வடிவமைப்பு சார்பில் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இதன் பொருட்டான மதியுரை ஒப்பந்தச் சேவையினை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாட்டுடன் அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் மீதும் கூட்டு தொழில்முயற்சி தரப்பினர்களான IDOM Consulting Engineering, Architecture, S.A.U (SPA) நிறுவனத்திற்கும் மற்றும் Saman Gorporation (KOR) நிறுவனத்திற்கும் துணை ஆலோசகர்களான Resources Development Consultants Ltd., (SRI) நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.