• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடம் சார்பில் ஒப்பந்தத்தை வழங்குதல்
- இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கல்விசாரா பதவியினர் சார்பில் உத்தியோகபூர்வ வீட்டு கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பெறுகை நடவடிக்கைக்கு அமைவாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்டகொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Nazeha Hardware & Construction Ltd., நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை 272.1 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.