• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து 2023 திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு Srilankan Airlines கம்பனியின் CFM56-5B விமான எஞ்சின்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- Srilankan Airlines கம்பனிக்குச் சொந்தமான மூன்று CFM56-5B ரக A320 விமானங்களுக்காக பயன்படுத்தப்படும் 07 எஞ்சின்களை 2019 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து 2023 திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பத்து தடவைகள் செப்பணிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு வரையறுக்கப்பட்ட போட்டி அடிப்படையில் கோரப்பட்டுள்ள கேள்விக்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரரான GE Engine Services, LLC (GE) நிறுவனத்திற்கு உரிய பணியினை நிறைவேற்றும் இந்த கேள்வியினை 57,785,317 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.