• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு 400 இற்கு அமைவாக இலங்கை பொலிசின் ஆற்றலை விருத்தி செய்வதற்காக தேசிய போட்டி கேள்விகோரும் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்தல்
- இலங்கை பொலிசின் ஆற்றலை விருத்தி செய்வதற்காக 125 cc மோட்டார் சைக்கிள்கள் 480 தேசிய போட்டி கேள்விகோரும் அடிப்படையில் விலை கோரி கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கோரப்பட்ட விலைகள் சம்பந்தமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் ஒன்று சகல வரிகளும் அடங்கலாக 322,650/- ரூபா பெறுமதியில் 480 மோட்டார் சைக்கிள்களை M/s. David Peiris Motor Company Lanka Ltd., நிறுவனத்திடமிருந்து கொள்ளவு செய்யும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.