• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம்
- இலங்கையை சமுத்திரம்சார் கேந்திர நிலையமொன்றாக அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் கடல்வலயத்தில் கடற்றொழில் மற்றும் கப்பல் பணிகளில் ஈடுபட்டுள்ள, விபத்துக்களுக்கு உள்ளாகும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சிறந்த வினைத்திறன் மிக்க ஈடுபடுத்தல் மற்றும் மீட்பு சேவையினை வழங்கும் நோக்கில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமொன்றைத் தாபிக்கும் கருத்திட்டத்தின் பிரதான தரப்பாக இலங்கை கடற்படையும் ஏனைய தரப்பினர்களாக இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை விமானப்படை மற்றும் வணிக கப்பல் செயலகம் என்பன நடவடிக்கைகள் எடுக்கவுள்ளன. இந்த கருத்திட்டத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள 06 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டெலர்களைக் கொண்ட கொடையின் மூலம் Bharat Electronic Limited (BEL) India நிறுவனத்தின் ஊடாக செய்து கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.