• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய இந்துமா சபை
- தேசிய ஒருமைப்பாடு, மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பலப்படுத்துதல், இந்து சமய நம்பிக்கை, இந்து கலாச்சாரம் மற்றும் இந்துமத மரபுரிமை என்பவற்றை மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பாதுகாத்தல், பலம்மிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஏனைய சமூகத்தினருடன் சமாதானமாக செயலாற்றுதல் என்னும் நோக்கங்களை வெற்றி கொள்ளும் எதிர்பார்ப்புடன் இலங்கையில் வசிக்கும் இந்துசமயத்தவர் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் 'இலங்கை தேசிய இந்துமா சபை' என்னும் பெயரில் சபையொன்றைத் தாபிக்கும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.