• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலைபேறுடைய கமத்தொழில் அபிவிருத்திக்கான முதலீடுகளை ஊக்குவிப் பதற்காக பிராந்திய நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டம்: அரசாங்க தனியார்துறை விவசாயிகளின் பங்கேற்பு
- சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையில் பல்வேறு துறைகளுக்குரியதாக அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் நோக்கில் 'நிலைபேறுடைய கமத்தொழில் அபிவிருத்திக்கான முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பிராந்திய நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டம்: அரசாங்க தனியார்துறை விவசாயிகளின் பங்கேற்பு' என்னும் செயலமர்வானது 2019 ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.