• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றுக்காக கொட்டாவையில் அமைந்துள்ள காணியினை 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- கொட்டாவை ஹைலெவல் வீதியில் அமைந்துள்ள ஏக்கர் 1 றூட் 1 பேர்ச்சர்ஸ் 19.40 விஸ்தீரணம் கொண்ட காணித்துண்டொன்றை சிறப்பு வர்த்தக நிலையம், சொகுசு கடைத்தொகுதிகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் 80 தொடர்மாடி வீடுகள் போன்ற பிரிவுகளைக் கொண்ட கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக மஹரகம, நாவீன்ன ஹைலெவல் வீதி, 310 ஆம் இலக்க மனையிடத்தில் அமைந்துள்ள Richard Peiris Distributors Ltd., நிறுவனத்திற்கு 99 வருடகால குத்தகை அடிப்படையில் கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.