• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாநகர திண்மக் கழிவுகளை நிரப்பும் இடங்களில் இறுதியாக அகற்றும் வசதிகளை (அருவக்காலு) வடிவமைத்தல், வழங்குதல் மற்றும் நிர்மாணித்தல்
- அருவக்காலில் நகர திண்மக் கழிவுகளை நிரப்பும் இடங்களில் கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகளை வடிவமைத்தல், வழங்குதல் மற்றும் நிர்மாணித்தல் தொடர்பிலான ஒப்பந்தம் China Harbour Engineering Company Limited (CHEC) மற்றும் Southwest Municipal Engineering and Research Institute of China (SEMEDRIC) என்னும் கூட்டுத் தொழில்முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கருத்திட்டத்தின் நிர்மாணிப்பு, நடைமுறைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு காலப்பகுதிக்குள் எழும் எதிர்பாரா செலவுகளுக்கு ஒப்பந்த தொகையின் 10 சதவீதமான 9,048,225.92 ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் 162,293,621.11 இலங்கை ரூபாவையும் ஒதுக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.