• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள பிரதான மசகு எண்ணெய் வடிகட்டல் பகுதி, டீசல் ஹைட்ரோ ரியக்டர் மற்றும் Continuous Catalyst Regeneration (CCR) Type Reformer உடன் Platformer இனை மாற்றீடு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள பிரதான மசகு எண்ணெய் வடிகட்டல் பகுதி, டீசல் ஹைட்ரோ ரியக்டர் மற்றும் Continuous Catalyst Regeneration (CCR) Type Reformer உடன் Platformer இனை மாற்றீடு செய்யும் கருத்திட்டத்தின் முதலாவது கட்டமாக முன் இறுதி (Front End) பொறியியல் வடிவமைப்பை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தினை UOP LLC, USA நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.