• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 நவெம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இரண்டு வருட ஒப்பந்த காலத்திற்கு SriLankan Airlines நிறுவனம் சார்பில் யப்பான் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக உணவு வகைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 2019 நவெம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு வருட ஒப்பந்த காலத்திற்கு யப்பான் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் 520 SriLankan Airlines விமானங்களுக்கு உணவு வகைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 307,695,073 யப்பான் யென் கொண்ட மொத்த ஒப்பந்த பெறுமதியில் M/s. Gate Gourmet Japan Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.