• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டுக்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் வரைவுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்
- அமைச்சரவையினால் அதன் முன்னைய கூட்டமொன்றில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப, விளையாட்டுக்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை தயாரிக் குமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், ஆதலால் சட்டமா அதிபரினால் பிரேரிக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட வரைவுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப் பதற்கும் அதன் பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.