• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றங்களால் பெறப்பட்ட ஆதாயங்களை வௌிப்படுத்திக் கொள்வதற்கான கூட்டிணைப்பு செயலணி
- ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றச்செயல், பணத்தூய்மையாக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடுதல் என்பவற்றை இல்லாதொழிக்காவிடின் அவற்றை எதிர்த்து நிற்பதிலும் குறைப்பதிலும் பிரதான தடையொன்றாக முறைசார் ஒருங்கிணைப்பு பொறிமுறையின் பற்றாக்குறை உள்ளதென்று சட்டத்தை அமுல்படுத்தும் சகல முகவராண்மைகளும் சுட்டிக் காட்டியுள்ளன. ஆதலால், தொழிற்பாட்டு மட்டத்திலுள்ள ஆளணியினருடன் பயனுறுதிவாய்ந்த ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றை தாபிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வு அலகின் பணிப்பாளரின் தலைமைத்துவத்தின் கீழும் 10 ஏனைய உறுப்பினர்களை உள்ளடக்கியும் சட்டவிரோதமாக பெற்றுக் கொள்ளப்பட்ட வளங்களை அறவிடுவதற்கென கூட்டிணைப்பு செயலணியொன்றை தாபிக்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.