• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதியை புனரமைத்தல்"
- கொழும்பு மாவட்டத்தில் புதுக்கடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதியானது கிட்டதட்ட 200 வருடங்கள் பழமையான தொல்பொருளியல் பெறுமதியுடைய கட்டட தொகுதியொன்றாகும். இக்கட்டடத் தொகுதிக்குள் நீதவான் நீதிமன்றங்கள் 7 உம், மாவட்ட நீதிமன்றங்கள் 9 உம் அத்துடன் மேல் நீதிமன்றங்கள் 7 உம், வர்த்தக மேல் நீதிமன்றங்கள் 3 உம் கூறப்பட்ட நீதிமன்றங்களின் உரிய அலுவலகங்களும் அமையப்பெற்றுள்ளதுடன் விரிவான புனரமைப்பு எதுவும் பொருத்தமான விதத்தில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆதலால், முன் கட்டுதல் கட்டமைப்பொன்றை ஆரம்பத்தில் உருவாக்குவதற்கும் அதன்பின்னர் கட்டம் கட்டமாக நீதிமன்ற கட்டடங்களை இடமாற்றுவதன் மூலம் மேற்கொள்ளப்படும் கட்டடத் தொகுதி சம்பந்தமான புனரமைப்புகளை மேற்கொள்வதற்கும் அத்துடன் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ள வருடாந்த ஏற்பாடுகளைக் கொண்டு இந்த நோக்கத்திற்குத் தேவைப்படும் மதிப்பிடப்பட்ட ஏற்பாடுகளை குறித்தொதுக்குவதற்கும் அத்துடன் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் உருவாக்கப்பட்டுள்ள நிலையியல் தொழினுட்பக் குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டும், வடிவமைப்பு, கட்டுதல் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கூறப்பட்ட புனரமைப்பு செயற்பாடுகளை குறித்தொதுக்குவதற்குமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.