• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌிநாட்டு விமான கம்பனிகளுக்கு உள்நாட்டு விமான பயண உரிமைகளை வழங்குதல்
- தற்போது வரை, ஏனைய நாடுகளுடன் இலங்கை இணங்கிக் கொண்டுள்ள விமான சேவைகள் உடன்படிக்கைகள் மூலம், உள்நாட்டு விமான பயண உரிமைகளின் கீழ் இலங்கையில் விமானங்களை தொழிற்படுத்துவதற்கான உரிமைகள் இருதரப்பு பங்காளி நாடுகளின் விமான கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், உள்நாட்டு விமானசேவை துறையில் புத்துயிர்ப்பை கொண்டிருக்கும் இலக்குடன், இலங்கையிலுள்ள உள்நாட்டு விமான நிலையங்களுக்கிடையில் மாத்திரம் (மட்டக்களப்பு சருவதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சருவதேச விமான நிலையம், கொழும்பு சருவதேச விமான நிலையம், இரத்தமலானை சருவதேச விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்‌ஷ சருவதேச விமான நிலையம்), உள்நாட்டு விமான பயண உரிமைகளுடன் கூறப்பட்ட சருவதேச விமான நிலையங்களுக்கிடையில் விமானங்களை தொழிற்படுத்துவதற்கு ஆர்வமுள்ள விமானக் கம்பனிகளின் உரிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைமுறையிலுள்ள விமான சேவைகள் உடன்படிக்கைகளின் கீழ் வௌியிடப்பட்ட, ஒரு (01) வருட செல்லுபடியாகும் காலப்பகுதியுடன்கூடிய தற்காலிக தொழிற்பாட்டு உரிமமொன்றின் கீழ், வர்த்தக விமான சேவைகளை மாத்திரம் தொழிற்படுத்துவதற்கு ஆர்வமுள்ள வௌிநாட்டு விமான கம்பனிகளுக்கு உள்நாட்டு விமான பயண உரிமைகளை வழங்குவதற்கு இலங்கை சிவில் விமானசேவை அதிகாரசபைக்கு அதிகாரமளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.