• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ராஜகிரிய, புத்கமுவ வீதியில் அமைந்துள்ள காணியை M/s. Baili Investment Lanka (Pvt.) Ltd., கம்பனிக்கு குத்தகைக்களித்தல்
- ராஜகிரிய, புத்கமுவ வீதி மற்றும் பாராளுமன்ற வீதி நோக்கியதாக அமைந்துள்ள 2 ஏக்கர் மற்றும் 3 றூட் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசு களுக்கு இணங்க கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம் கருதி M/s. Baili Investment Lanka (Pvt.) Ltd., கம்பனிக்கு 99 வருட காலப்பகுதிக்கு குத்தகைக்களிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.