• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீண்டகால சிறுநீரக நோயினாலும் காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு குருதி சுத்திகரிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை விருத்தி செய்த
- நீண்டகால சிறுநீரக நோயாளிகளுக்காக 33 புதிய குருதி சுத்திகரிப்பு நிலையங்களின் வழங்கல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 50 குருதி சுத்திகரிப்பு நிலையங்களின் விரிவாக்கம் அடங்கலாக நாடு பூராகவும் 643 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குவதற்கும் கூறப்பட்ட கருத்திட்டத்திற்குத் தேவைப்படும் ஏற்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கும் Frankfurter Str.92, Eschborn எனும் முகவரியிலுள்ள Hospinorm Projects GmbH நிறுவனத்தினால் செய்யப்பட்ட கருத்திட்ட பிரேரிப்பை மதிப்பிட்டு சிபாரிசுகளை செய்வதற்கென தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சு குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.