• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2006 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்புச் சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவுக்காக பிரேரிக்கப்பட்ட திருத்தம்
- 2006 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்புச் சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் 'இறக்குமதி ஏற்றுமதி நேரம்' என்பது சுங்க குறிப்பு கையளிக்கப்பட்ட திகதியாக இருக்கவேண்டிய போதிலும் சுங்க கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் பிரகாரம் இறக்குமதி நேரமாக அமையவேண்டியது உரிய பொருளானது இறக்குமதி செய்யப்படும் கப்பல் உண்மையாகவே துறைமுக எல்லைக்குள் வந்த நேரமாகவும் உள்ளமையினால் (ஏற்றுமதி நேரமாக அமையவேண்டியது கப்பலுக்கு உரிய பொருளானது ஏற்றப்பட்ட நேரமாகும்) தௌிவில்லாதுள்ளது ஆதலால், உரிய இரண்டு சட்டங்களுக்கும் இடையே ஒருமைப்பாடினை பேணுவதற்கு இயலுமாகும் வகையில் 2006 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்புச் சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவைத் திருத்தும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.