• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கப்பலிலிருந்து கரையோரம் வரை செயற்படும் மேலதிக பாரந்தூக்கியொன்றினை கொள்வனவு செய்தல்
- ஜயா கொள்கலன் முனைவிடத்தின் கட்டம் V கொள்கலன் கப்பல் துறையில் கப்பலிலிருந்து கரையோரம் வரை செயற்படும் பாரந்தூக்கிகள் மூன்றினை (03) வழங்கி, பொருத்தி மற்றும் செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை M/s. Shanghai Zhenhua Heavy Industries Co., Ltd., நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, அரசாங்க பெறுகை வழிகாட்டல் - 2006 இன் மறுகட்டளை பெறுகை முறையினைப் பின்பற்றி, மேற்போந்த ஒப்பந்தத்தின் அதே நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அத்துடன் கொடுப்பனவு முறையின்படி கப்பலிலிருந்து கரையோரம் வரை செயற்படும் மேலதிக பாரந்தூக்கியொன்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை M/s. Shanghai Zhenhua Heavy Industries நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.