• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் விமான அறை பயணப் பொதிகளுக்கான வெடிப்பொருட்களை கண்டறியும் முறைமையினை வழங்கி, பொருத்தி, கையளித்தல்
- பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்திலுள்ள உட்செல்லல் வாயில்களில் விமான அறை பயணப் பொதிகளை பரிசோதிப்பதற்கு பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே (X-Ray) - விமான அறை பயணப் பொதி திரையிடல் பரிசோதனை இயந்திரங்கள் 2004 ஆம் ஆண்டில் பொருத்தப்பட்டுள்ளதுடன், கூறப்பட்ட இயந்திரங்களில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் தடையானது விமான தாமதங்களுக்கு இட்டுச் செல்ல முடியும். ஆதலால், விமான நிலையங்கள், விமானசேவைகள் இலங்கை கம்பனிக்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள நிதியங்களைப் பயன்படுத்தி அவசர பெறுகை ஏற்பாடுகளின் கீழ், விமானசேவை பாதுகாப்பு நியமங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு, தற்போதுள்ள பழைய விமான அறை பொதி எக்ஸ்ரே (X-Ray) இயந்திரங்களை, வெடிப்பொருட்களை கண்டறிவதற்கும் அத்துடன் தொடர்புபட்ட பாதுகாப்பு தேவைப்பாடுகளுக்குமான கணனி அடுக்கு கதிர்வீச்சு வரைவியை (Computer Tomography) கொண்ட நவீன எக்ஸ்ரே (X-Ray) இயந்திரங்களைக் கொண்டு பதிலீடு செய்வதற்கான உரிய கொள்வனவை ஆரம்பிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.