• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் 25 பாலங்களை மீள் நிர்மாணிக்கும் கருத்திட்டம் - சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்த
- அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் 25 பாலங்களை மீள் நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் பொதி 02 இன் கீழ் சப்பிரகமுவ மாகாணத்தின் தேசிய வீதி வலயமைப்பிலுள்ள சேதமடைந்ததும் குறுகலானதுமான 09 பாலங்களை மீள்நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, தெஹியோவிட்ட - தெரணியகல வீதியிலுள்ள 05 பாலங்களையும், கலிகமுவ-ருவென்வெல்ல வீதியிலுள்ள 02 பாலங்களையும் மற்றும் கேகாலை-புளத்கொஹூபிட்டிய வீதியிலும் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியிலும் தலா 01 பாலத்தையும் மீள்நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 1,289.76 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. ELS Construction (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கைளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.