• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மண்சரிவு ஆபத்துக்களை தடுக்கும் கருத்திட்டத்திற்காக சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள வீதிகளில் ஆறு இடங்களில் மண்சரிவினைத் தடுக்கும் நடவடிக்கைகள் - பொதி 02
- வீதி அனர்த்த முகாமைத்துவ பொதி 02 இன் கீழ் சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள வீதிகளில் ஆறு இடங்களில் மண்சரிவினைத் தடுக்கும் ஆரம்ப ஒப்பந்த விலையை திருத்தும் பொருட்டும் அம்பேபுஸ்ஸ , அப்புத்தளை, பண்டாரவளை, உடுவர மற்றும் எல்ல ஆகிய இடங்களில் இனங்காணப்பட்ட அமைவிடங்களில் மண்சரிவினைத் தடுக்கும் நிர்மாணிப்புக்கான ஒப்பந்தத்தை தற்போதைய ஒப்பந்தக்காரரான RR-Soltec Joint Venture நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.