• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை கொள்வனவு - 2019
- வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizer Company Ltd., நிறுவனம் ஆகியவற்றின் ஒக்ரோபர் மாதத்திற்கான பசளைத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் பொருட்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2,000 மெற்றிக் தொன் யூரியாவை மெற்றிக் தொன் ஒன்று 299.50 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s Agri Commodities & Finance நிறுவனத்திடமிருந்தும் 8,500 மெற்றிக் தொன் Muriate of Potash மெற்றிக் தொன் ஒன்று 349.43 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s Agricultural Resources & Investment Pte. Ltd. நிறுவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்தமை சார்பில் தழுவு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.