• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் சங்கிலி பாலம் கிராமிய நீர்வழங்கல் திட்டத்தை நிர்மாணித்தல்
- பாதுகாப்பான குடிநீர் வசதிகளைக் கொண்டிராத முல்லைத்தீவு, கிளிநொச்சி, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் நுவரெலியா ஆகிய தெரிவு செய்யப்பட்ட 07 மாவட்டங்களில் 540 கிராம சேவையாளர் பிரிவுகளை மையப்படுத்தி குழாய்மூலமான நீர்வழங்கலையும் துப்பரவாக்கல் வசதிகளையும் மேம்படுத்துதலே நீர்வழங்கல் மற்றும் துப்பரவாக்க மேம்பாட்டு கருத்திட்டத்தின் (2015-2020) நோக்கமாகும். அதற்கிணங்க, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 14 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கும் 2039 ஆம் ஆண்டளவில் 3,050 குடும்பங்கள் நன்மையடைவதற்குமாக நடைமுறைப்படுத்தப்படும் சங்கிலி பாலம் கிராமிய நீர்வழங்கல் திட்டத்தின் நிர்மாணத்திற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Q-SJV (Qingdao Savinda JV) நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.