• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டு சட்டத்தின் 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- தேசிய விளையாட்டுச் சங்கங்கள் தொடர்பான தேர்தல்களுடன் சம்பந்தமான மேன்முறையீடுகளை ஒழுங்கான மற்றும் சௌகரியமான முறையொன்றில் விசாரித்து விளையாட்டு நிர்வாகத்திற்கு கூடுதல் பொருத்தமான ஆட்களை நியமிக்கும் குறிக்கோளை அடைந்து கொள்ளும் பொருட்டு 2019‑08‑23 ஆம் திகதியிடப்பட்டதும் 2137/86 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி (அதிவிசேட) அறிவித்தலும் 2019‑08‑23 ஆம் திகதியிடப்பட்டதும் 2137/85 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி (அதிவிசேட) அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளன. அதற்கிணங்க, மேற்போந்த இரு வர்தத்மானி அறிவித்தல்களையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கென தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.