• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய கல்வி சட்டமூலத்தை வரைதல்
- தற்போதைய கல்வி முறைமையின் சட்ட அடிப்படை 1939 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க கல்வி கட்டளைச் சட்டமும் அதன் பின்னரான திருத்தங்களும் மற்றும் விசேட சட்டங்களும் ஆகும். இச்சட்டங்களில் உள்ளடக்கப்பட்ட பெரும்பாலானா ஏற்பாடுகள் தற்போது வழக்கொழிந்து போயுள்ளன. ஆதலால், இச்சட்டங்களை இற்றைப்படுத்தும் நோக்குடன், கல்வித் துறையிலும் ஏனைய பல்வேறுபட்ட துறைகளிலுமுள்ள அக்கறைதாரர்களினால் செய்யப்பட்ட எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமான ஆலோசனைகளை கவனத்திற் கொண்டு, கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட உத்தேச வரைவு கட்டமைப்பினை புதிய கல்வி சட்டமூலத்தின் தயாரிப்பிற்காக கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட முடியும். ஆதலால், புதிய கல்வி சட்டமூலத்தை மீளாய்வு செய்து, சிபாரிசுகளை செய்யும் பொருட்டு கல்வி அமைச்சினதும், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சினதும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சினதும், நிதி அமைச்சினதும், தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும், தேசிய திட்டமிடல் திணைக்களத்தினதும், தேசிய கல்வி ஆணைக்குழுவினதும், தேசிய கல்வி மற்றும் தனியார்துறை கல்வி நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.